ஒரே நாளில் இரண்டு மாநிலத்தில் நிலநடுக்கம்.!
earthquake in bihar and jammu and kashmeer
ஒரே நாளில் இரண்டு மாநிலத்தில் நிலநடுக்கம்.!
நாட்டில் உள்ள பீகார் மாநிலத்தில் அராரியா நகரில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் மிதமான அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மேற்கு வங்காள மாநிலத்தின் சிலிகுரி நகரில் இருந்து தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் உணரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை 10.10 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
கடந்த ஒன்பதாம் தேதி அந்தமான் நிகோபர் தீவில் இதேபோன்று மிதமான அளவிலான நிலநடுக்கம் மாலை 4.01 மணியளவில் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
earthquake in bihar and jammu and kashmeer