மேகாலயாவில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!
Earthquake in Meghalaya Nov 24
மேகாலயாவின் துரா அருகே (வியாழன்) இன்று அதிகாலையில் ரிக்டர் அளவுகோலில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது பூமியின் மேற்பரப்பில் மேகாலயா துராவின் வடகிழக்கில் 37 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 3:46 மணியளவில் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Earthquake in Meghalaya Nov 24