திடீரென குலுங்கிய வீடுகள் - நாகலாந்தில் நிலநடுக்கம்.!
earthquake in nagaland
நாகலாந்தில் ரிக்டர் அளவுகோலில் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் உள்ள சுமோகெடிமா பகுதியில் இன்று மதியம் 1.22 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 25.73 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.95 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என்று முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.