திடீரென குலுங்கிய கட்டிடங்கள் - உத்தரகாண்டில் நிலநடுக்கம்.!
earthquake in uttarkhant
உத்தரகாண்டில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.16 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. இந்தத் தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில், 29.85 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 80.52 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என்று முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.