இந்தியாவை பதம் பார்க்கும் நிலநடுக்கம்..!! குஜராத், அந்தமானில் கட்டிடங்கள் குலுங்கின..!! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் சக்தி வாய்ந்த மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் சுமார் 50,000 பேர் உயிரிழந்த நிலையில் பல லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக இலங்கை, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதி அடைய செய்துள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம ,சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தேசிய புவியியல் இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் இந்தியாவில் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து கூறியதாவது "இந்திய டெக்கானிக் பிளேட் ஆண்டுக்கு 5 சென்டிமீட்டர் வீதம் இந்திய கண்டத்தட்டு நகர்வதால் தட்டுகள் இணையும் பகுதியில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

கண்ட தட்டுக்கள் இணையும் பகுதி இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இமயமலையில் அமைந்துள்ள உத்தரகாண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது" என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.0 அலகுகளாக பதிவாகியுள்ளது. அதேபோன்று குஜராத் மாநிலத்தின் அரவிக்கடலை ஒட்டிய துவாரகா புனித நகரத்திலும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் ஏற்படும் அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் துருக்கி, சிரியாவை போன்று பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட கூடுமோ என்ற அச்சம் இந்திய மக்களிடையே நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake today in Gujarat and Andaman Islands


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->