நாடு முழுவதும் ரூ.4,650 கோடி பறிமுதல்.. முதலிடத்தில் பாஜக ஆளும் மாநிலம்.!! அப்போ தமிழ்நாடு? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடாளுமன்ற பொது தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் வரலாற்று இதுவரை இல்லாத அளவிற்கு முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு முன்பே நாடு முழுவதும் நான்கு 4,650 கோடி ரூபாய் பணம் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட மொத்த பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு 3475 கோடியாக இருந்த நிலையில் தற்போது முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே 4650 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதில் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக ரூபாய் 778 கோடி ரூபாய் மதிப்புலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் 650 கோடி ரூபாய் அளவுக்கு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தை எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் திமுக ஆளும் தமிழகம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 460 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI seized rs4650 crores in India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->