பிகார் துணை முதல்வருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்! நடந்தது என்ன?
Ed summons Bihar Deputy Chief Minister again
பீகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ்க்கு, ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜனவரி 5ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தேஜஸ்வி யாதவ் டிசம்பர் 22 ஆம் தேதியும், லாலு பிரசாத் டிசம்பர் 27ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால் நேற்று தேஜஸ்வி யாதவ் ஆஜராகாத நிலையில் மீண்டும் ஜனவரி 5ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவியாற்றினார்.
அப்போது ரயில்வே பணிகளில் சிலர் விதிமுறைகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ed summons Bihar Deputy Chief Minister again