சென்னையில் வலி நிவாரணி மாத்திரை விற்பனை - பெண்கள் உள்பட 8 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கண்ணகி நகரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கண்ணகி நகர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, அந்த பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்து 800 வலி நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அவர்கள் பெயர் சூர்யா, வினோத், பாபு, நாகராஜ், சிவகுமார், லாவண்யா, விக்னேஷ், ரம்யா என்பதும் அவர்கள் ஹைதராபாத்தில் இருந்து 4,000 ரூபாய்க்கு ஒரு பெட்டி வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight peoples arrest in chennai for pain killer tablet sales


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->