கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பில் அடுத்தடுத்து மயங்கி விழுந்து 8 பேர் பலி.!
eight peoples died for constable recruitment test in jarkhant
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான உடற்கூறு செயல்முறை தொடங்கியது. அப்போது, 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல் பரிசோதனையின் போது மூச்சுத் திணறலால் மயக்கம் ஏற்பட்டதாகவும், தங்கள் செயல்திறனை அதிகரிக்க ஆற்றல் பானங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், கடுமையான வெப்பம் மற்றும் நீண்ட வரிசையில் நின்றதே மயக்கம் மற்றும் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர்.கே.ரஞ்சன் கூறுகையில், "இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட நபர்களிடையே ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. பல நோயாளிகள் குறைந்த இரத்த அழுத்தம், அதிக வியர்வை மற்றும் சுவாசிப்பதில் சிரமத்துடன் இருந்தனர், சிலர் கோமா நிலைக்குச் சென்றனர் என்றுத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முதல்வர் ஹேமந்த் சோரன், கான்ஸ்டபில் ஆட்சேர்ப்பு தேர்வுகளின் நேரத்தை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார். மயங்கி விழுந்த சில நபர்கள் தங்கள் சொந்த பெயர்கள் அல்லது முகவரிகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் மேலும் கவலைகளை எழுப்புகிறது.
English Summary
eight peoples died for constable recruitment test in jarkhant