தெலுங்கானாவில் சோகம் - வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.!
eight peoples died for floods in telungana
தெலுங்கானாவில் சோகம் - வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.!
இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை விடாமல் வெளுத்து வாங்கி வருகிறது.
தொடர் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து கரை புரண்டு ஓடுகிறது. மேலும், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது பெய்த மழையால் அங்குள்ள ஒரு கிராமம் வெள்ளக்காடானது. இதனால், அந்த கிராமத்தை சேர்ந்த 12 பேர் பாதுகாப்பான இடம் தேடி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 4 பேர் மட்டும் தாமாக போராடி வெள்ளத்தில் இருந்து தப்பித்தனர். மற்ற 8 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
English Summary
eight peoples died for floods in telungana