கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ட்ரூடோவை கேலி செய்த உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்..!
Elon Musk mocked Trudeau
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளளார். அவரைக் கேலி செய்யும் விதத்தில் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்,செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது ஆதரவாளரான எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பு ஒன்றை அளித்துள்ளார். அதிலிருந்தே உலக அரசியல்வாதியாகிவிட்டார் எலான் மஸ்க். அத்துடன், உலக நாடுகளின் அரசியலில் என்ன நடந்தாலும், அதை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைக் கேலி செய்யும் வகையில், சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2025 அருமையாக காட்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், ட்ரம்ப் வெற்றி பெற்றுவிட்டார், ட்ரூடோ ராஜினாமா செய்துவிட்டார், கெய்ர் ஸ்டார்மரைக் குறித்த உண்மை வெளிவந்துவிட்டது, சரியான நேரத்தில் மாபெரும் மனிதர்கள் அதிகாரத்துக்கு வருகிறார்கள், நமக்கு அவர்கள் எல்லாரும் தேவை என்று கூறி, உலக நிகழ்வுகள் பலவற்றை வரிசையாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ட்ரம்ப், ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என்றும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும் கேலி செய்துவரும் நிலையில், தற்போது எலான் மஸ்கும் தன் பங்குக்கு ட்ரூடோவை கேலி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.