"எதையும் ஹேக் செய்யலாம்" முன்னாள் மத்திய அமைச்சருக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்!
Elections 2024 EVM issue Elon Musk replay
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என டெஸ்லாவின் நிறுவனரான எலான் மஸ்கின் பதிவை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
அவரின் அந்த பதிவில், "இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றது, அவற்றை ஆராய்வதற்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தியவின் தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என புகார்கள் எழுந்துள்ளன. அரசு அமைப்புகள் பொறுப்பேற்க முடியாத நிலையில் ஜனநாயகம் ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது” என்று எலான் மஸ்கின் பதிவை பகிர்ந்து ராகுல் காந்தி பதிவிட்டு இருந்தார்.
இதற்கிடையே, மத்திய முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வேளாண் மஸ்க் பதிவை பகிர்ந்து, "இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை” என்று ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒழிக்க வேண்டும் என்ற எலான் மஸ்க்கிற்கு பதில் கொடுத்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் ராஜிவ் சந்திரசேகருக்கு, "எதையும் ஹேக் செய்யலாம் (Anything can be hacked)" என்று எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
மக்க்கலவை தேர்தலுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் EVM குறித்து பல சந்தேகங்களை எழுப்பின. இது அனைத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்ததுடன், இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று உறுதியளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Elections 2024 EVM issue Elon Musk replay