ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்‌‌..எலக்ட்ரிக் ஸ்கூட்டி வெடித்து ஒருவர் பலி.. 2 படுகாயம்.! - Seithipunal
Seithipunal


அந்த பிரதேச மாநிலம் விஜயவாடாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டி வாங்கிய ஒரே நாளில் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சிவகுமார். இவர் நேற்றைய தினம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டின் முன் அறையில் வாகனத்தை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் பேட்டரி திடீரென வெடித்தது.

அதனைத்தொடர்ந்து வீட்டின் மின்சார வயர்களில் பற்றி எரிந்து புகை வெளியேறியது. இதனால் வீட்டின் அறை முழுவதும் மீதும் தீ பரவியது.

இதில், சிவகுமார் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக தொடர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டி வெடித்து விபத்து ஏற்படுத்துவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electric Scooty fired death in vijayavada


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->