மின்சார துறை சீர்த்திருத்த பணிகளுக்கு நிதி! தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


மின்துறை சீர்திருத்த பணிகளுக்காக ரூ.7,054 கோடி நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது.

உட்பட 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறை சீரமைப்புக்காக தமிழகம், ஆந்திரா, ஒடிசா, அசாம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, ஹிமாச்சல் பிரதேசம், ஆகிய 10 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களான உத்திர பிரதேசத்திற்கு, ரூ.6,823 கோடி நிதியும், ராஜஸ்தானுக்கு ரூ.5,186 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

ஆந்திர மாநிலத்திற்கு ரூ.3,716 கோடி நிதியும், ஒடிசாவிற்கு ரூ.2,725 கோடி நிதியும், அசாம் மாநிலத்திற்கு ரூ.1,886 கோடி நிதியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.251 கோடி நிதியும், மேகாலயாவிற்கு ரூ.192 கோடி நிதியும், சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.191 கோடியும், மணிப்பூர் மாநிலத்திற்கு ரூ.180 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electricity reform fund for states


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->