15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
enforcement department officer arrested for bribe in manipur
மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஒரு நபர் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சிட்பண்ட் வழக்கை தீர்ப்பதற்கு அமலாக்க இயக்குநரக அதிகாரி நேவல் கிஷோர் என்பவரை சந்தித்துள்ளார். அந்தப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நேவல் கிஷோர், ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இறுதியில் 15 லட்ச ரூபாய் தந்தால் வழக்கை தீர்த்து வைக்கிறேன் என்று அமலாக்கத்துறை அதிகாரி நேவல் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆனால், இதனை விரும்பாத அந்த நபர்
சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் ரசாயனம் தடவப்பட்ட 15 லட்சம் பணத்தை நேவல் கிஷோருக்கு தர ஏற்பாடு செய்தனர்.
அதன் படி அந்த நபர் அந்த பணத்தை அதிகாரிக்கு கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் அமலாக்கத்துறை அதிகாரி நேவல் கிஷோர் மற்றும் அவரது கூட்டாளி பாபுலால் மீனா உள்ளிட்ட இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேவல் கிஷோரை இடைநீக்கம் செய்துள்ளதாகவும், அவர் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். லஞ்சம் வாங்கும் போது அமலாக்கத்துறை அதிகாரியே கையும், களவுமாக கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
enforcement department officer arrested for bribe in manipur