8-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை - ஆஜராகுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?. - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநிலத்தின் இரண்டு அமைச்சர்களை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரைக்கும் ஜாமின் கிடைக்காத நிலையில்தான் அம்மாநில முதலமைச்சரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. 

ஆனால், அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதம். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வருகிறார். இதுவரைக்கும் ஆறு முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஏழாவது முறையாக சம்மன் அனுப்பியது. 

அப்போதும், அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், அமலாக்கத்துறை எட்டாவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மார்ச் 4-ந்தேதி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

enforcement department summon send to aravind kejriwal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->