ஒன்பதாவது முறையாக வந்த சம்மன் - கேஜ்ரிவால் ஆஜராக வாய்ப்பா? - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இதுவரைக்கும் எட்டு முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் இதனை கேஜ்ரிவால் ஏற்றுக்கொள்ளாமல், இந்த சம்மன்கள் சட்டவிரோதம் எனவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் தெரிவித்து வந்துள்ளார். 

இது தொடர்பாக இரண்டு புகார் மனுக்களை அமலாக்கத் துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் புகார்கள் தொடர்பான ஆவணங்களை கேஜ்ரிவாலிடம் வழங்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார். 

அமலாக்கத் துறை சம்மன்களை தவிர்ப்பது தொடர்பான வழக்கில் முதல்முறையாக கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒன்பதாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்க துறையின் சம்மன்கள் சட்டவிரோதமான என்று கூறும் நிலையில் மீண்டும் கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

enforcement department summon send to aravind kejriwal nineth time


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->