16 குளங்களை வெட்டிய சுற்றுச்சூழல் ஆர்வலர் காமே கவுடா காலமானார்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள தாசனதொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கமே கவுடா(86). இவர் 50 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால் அங்கிருந்த தாவரங்களும், கால்நடைகளும் இறக்கும் நிலை ஏற்பட்டபோது, 16 குளங்களை தனி ஆளாக தனது சொந்த பணத்தில் வெட்டினார்.

மேலும் மலையில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தார். இதனால் அங்கு தாவரங்களும், கால்நடைகளும் நீரின்றி தவிக்கும் நிலையை போக்கினார். இதன் காரணமாக வறண்ட பூமியாக இருந்த அந்த கிராமமே நெல், கரும்பு விளையும் நிலமாக மாறியது. 

காமே கவுடாவின் சேவையை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி "அசாதாரண ஆளுமை கொண்ட விவசாயி" என்று கடந்த 2020ம் ஆண்டு ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், காமே கவுடாவை வெகுவாக பாராட்டினார். இந்நிலையில் முதுமை காரணமாக காமே கவுடா நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Environmentalist Kame Gowda who cut 16 ponds has passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->