புதிய குற்றவியல் சட்டங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் - அமித்ஷா! - Seithipunal
Seithipunal


புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கவலை கொள்ளும் தலைவர்களை சந்திக்க தயாராக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புதியதாக மூன்று குற்றவியல் சட்டங்கள் இன்று அமல்படுத்தப்பட்டது. புதிதாக அமல்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததாவது, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று குற்றவியல் நீதி சட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

மூன்று குற்றவியல் நீதி சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் நவீன குற்றவியல் நீதி அமைப்புக்கு வழி வகுக்கும். அரசியலைத் தாண்டி அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

77 வருட சுதந்திர காலத்திற்குப் பிறகு சுதேசி முழுமை பெற்றுள்ளது. இந்தியாவின் நெறிமுறைகளை உள்ளடக்கியதாக உள்ளது. புதிய குற்றவியல் நீதி சட்டங்கள் தொடர்பாக சந்தேகம் வேகம் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Everyone should support new criminal laws Amit Shah


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->