பா.ஜ.க முன்னாள் எம்.பி. மீது பெண் நிருபர் வழக்கு! - Seithipunal
Seithipunal


கேரளா கோழிக்கோட்டில் பிரபல திரைப்பட நடிகரும் பா.ஜ.க முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பெண் நிருபர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கும் போது சுரேஷ் கோபி பெண் நிருபர் தோள் மீது கை வைத்துள்ளார். 

அவரது இந்த செயலால் பெண் நிருபர் உடனடியாக பின்னால் நகர்ந்து சென்ற போதும் சுரேஷ்கோபி கையை எடுக்காமல் மீண்டும் அந்த பெண்ணின் தோள் மீது கை வைத்திருக்கிறார். 

பின்னர் அவரின் கையை பெண் நிருபர் தட்டி விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி நடிகரின் இந்த செயலுக்கு விமர்சனம் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக நடிகர் சுரேஷ் கோபி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, ''அந்த பெண்ணிடம் நட்பு ரீதியாக தான் நடந்து கொண்டேன்.

ஆனால் அந்த பெண் இந்த தருணத்தை மோசமாக உணர்ந்தார் எனில் வருந்துகிறேன்'' என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பேசிய அந்த பெண் நிருபர், 'அவர் வெளியிட்டுள்ள பதிவு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக விளக்கம் அளிப்பது போல உள்ளது. 

அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்' என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கோழிக்கோடு நகர காவல் நிலையத்தில் பெண் நிருபர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex BJP MP against case female reporter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->