கர்ப்பிணி பெண் அதிகாரியை கொடூரமாக குடும்பம்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சத்தாரா வனப்பகுதியில் கர்ப்பினிப்பெண் வனக் காவலர் மீது கொடூர தாக்குதல் நடத்திய முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வனக்காவலராக பணிபுரிந்து வரும் கர்ப்பிணி பெண் ஒருவர் சமீபத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது ஒப்புதல் இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்து சென்ற விவகாரம் நிர்வாக குழுவின் தலைவரான ராமச்சந்திர ஜான்கருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்து சென்றதால் பெண் வனக்காவலருக்கும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. அப்போது, அந்த நபர் தனது மனைவியுடன் சேர்ந்து கர்ப்பிணி பெண் வனக்காவலரை கொடூரமாக தாக்கி உள்ளார். அந்தப் பெண்ணின் கைகளை உடைத்தும், கீழே போட்டு தலைமுடியை பிடித்து தர தரவென இழுத்துள்ளார். மேலும், பெண் வனக்காவலர் 3 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கர்ப்பிணி பெண் வனக்காவலர் தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பார்ப்பவர்களை பதபதவைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தனை பேர் சுற்றி இருந்தும் ஒருவர் கூட அந்த பெண் வனக்காவலர் தாக்கப்படுவதை தடுக்கவில்லை.

மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திர ஜான்கர் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex Panchayat president attacked Consive women Forester


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->