ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரர்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ராணுவ வீரர் ஓடும் ரயிலில் ரயில்வே ஊழியருடன் மோதல் ஏற்பட்டு துப்பாக்கி சூடு நடத்தியதால் கைது செய்யப்பட்டார். 

மேற்கு வங்கம்-புதுடெல்லி இடையில் ஆன  ரயிலில் ஏசி பெட்டியில் நேற்று முன்தினம் மாலை முன்னாள் ராணுவ வீரர் ஹா்வீந்தா் சிங் (வயது 41) என்பவர் பயணித்துள்ளார். 

அவரிடம் ஹௌரா-டெல்லி இடையிலான ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பயண சீட்டு இருந்தது. தவறுதலாக அவர் வேறு ரயிலில் ஏறி ஏசி வகுப்பில் இருந்த ரயில்வே ஊழியரிடம் தனக்கு இருக்கை ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளார். 

சரியான பயண சீட்டு இல்லாததால் ரயில்வே ஊழியர் அவருக்கு இருக்கை ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் ஹா்வீந்தருக்கும் ரயில்வே ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் ஹா்வீந்தர் சிங் தன்னிடம் இருந்த கைது துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். 

இதில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் ரயிலில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்ததால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக இது குறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே போலீசார் அடுத்த ரயில் நிலையத்தில் அரவிந்தர் சிங்கை கைது செய்து அவரிடம் இருந்த கைதுப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex soldier shot train Railway Police action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->