ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் : தொகுதி பங்கீட்டை இன்று நிறைவு செய்தது இந்தியா கூட்டணி கட்சி!
Jharkhand assembly election the India alliance party completed the seat allocation today
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு அடுத்த மாதம் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சியில் இன்று தொகுதி பங்கீடு நிறைவு அடைந்துள்ளது. அந்த வகையில்,
மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டி என்ற விவரங்களை இந்தியா கூட்டணி வெளியிடாத சூழ்நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளதாவது, இந்தியா கூட்டணி தலைவர்கள் தற்போது இங்கு இல்லை என்று கூறிய அவர், பின்னர் இது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவு பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Jharkhand assembly election the India alliance party completed the seat allocation today