மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் : விசிக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
Maharashtra assembly elections vck announcement of competing blocks
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதிலும், தொகுதி பங்கீட்டினை முடிவு செய்யும் பணிகளிலும் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சி பத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு,
கங்காபூர் ,பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி , கல்மனுரி , வாஸ்மாட், தெக்லூர் ,அவுரங்காபாத் (மையம்)
முள்ளன்ட் ( மும்பை) மற்றும் கன்னட் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.
இதே போல், பிவாண்டி, மலேகோன், வாசிம், அவுரங்காபாத் (மேற்கு), அவுரங்காபாத் (கிழக்கு), புலம்பிரி, மும்பை மலாட், தாராவி, போக்கர்டன் ஜல்னா மற்றும் துலே ஆகிய தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தல் போட்டியிடும் என்று விசிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Maharashtra assembly elections vck announcement of competing blocks