உ.பி-யில் அதிர்ச்சி: பேயோட்டுவதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


உத்திரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா அருகே பேயோட்டுவதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு யஷ்வீர் சிங் தெரிவித்ததாவது, கடந்த டிசம்பர் 29ஆம் தேதி பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் வக்கீல் ராஜ் ஷேக் என்ற நபர் பேயோட்டும் பயிற்சிக்காக தன்னை அழைத்ததாகவும், அவரது வீட்டிற்கு சென்றபோது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த வக்கீல் ராஜ் ஷேக் என்பவரை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து ஒரு ரகசிய தகவலின் பேரில், போலீசார் வக்கீல் ராஜ் ஷேக்கை ஒரு ஹோட்டலுக்கு அருகில் இருந்து நேற்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exorcist Arrested For Raping Woman In uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->