நடுவழியில் தடம் புரண்ட விரைவு ரெயில் - பயணிகளின் கதி என்ன?
express train derailed in kerala
கேரளா மாநிலத்தில் கண்ணூர்-ஆலப்புழா நோக்கி செல்லும் விரைவு ரெயில் கண்ணூர் ரெயில் நிலையம் அருகே பரகண்டி பகுதியில் தடம் மாற்றம் செய்த பிறகு கண்ணூர் ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு வந்த போது ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் கடும் போராட்டத்திற்கு பிறகு கடைசி 2 பெட்டிகளை ரெயில்வே ஊழியர்கள் பிரித்து எடுத்தனர். காலை 5.10 மணிக்கு புறப்பட வேண்டிய கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரெயில் ஒன்றரை மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் காலை 6.43 மணிக்கு கண்ணூர் ரெயில் நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:- இந்த சம்பவத்தின்போது ரெயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றனர். இந்த விபத்து காரணமாக அந்த வழியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
express train derailed in kerala