மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயம்... மாநில அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக மும்பையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. மும்பையில் நேற்று ஒரே நாளில் 763 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான அதிக பாதிப்பாகும். 

கொரோனா தொற்று அதிகரிப்பதை அடுத்து மும்பை மாநகராட்சி ஆணையர் நேற்று அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது, கொரோனா 4-வது அலை வருகிற ஜூலை மாதம் ஏற்படலாம் என கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கணித்துள்ளனர். அவர்களது முந்தைய எச்சரிக்கை பலித்துள்ளது. 

எனவே தற்போதைய அவர்களது இந்த எச்சரிக்கையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சமீப நாட்களாக கொரோனா அதிகரித்து வருவதை பார்க்கும் போது 4-வது அலை வரும் வாய்ப்பை மறுத்து விட முடியாது. 4வது அலை மற்றும் மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதாக சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான பரிசோதனை செய்யவும், தடுப்பூசிகளை செலுத்துவோம் மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

face mask compulsory in Maharashtra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->