பேஸ்புக் மூலம் காதல்! காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை சந்திப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது: 

உத்தர பிரதேசம், கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவர் தற்போது ராஜஸ்தான் அல்வார் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் அரவிந்த். 

தற்போது அஞ்சு பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்வாவில் உள்ள, அவரது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். 

அப்பர் திர் மாவட்ட போலீசார் அஞ்சுவை பிடித்து விசாரணை நடத்தியபோது, பேஸ்புக் மூலமாக நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அவர் மீது காதல் கொண்டதால், அவரை சந்திக்க பாகிஸ்தான் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதால், அவரை போலீசார் விட்டுள்ளனர். அஞ்சு பாகிஸ்தானில் உள்ள செய்தி வெளிவர, ராஜஸ்தான் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். 

இது குறித்து அவரது கணவர் அரவிந்து தெரிவிக்கையில்,''அஞ்சு கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். மேலும் அவரிடம் பாஸ்போர்ட் உள்ளதால் தனது நண்பரை பார்க்க செல்வதாக தெரிவித்தார். 

அவரிடம் இரண்டு நாட்களுக்கு முன் வாட்ஸ்அப் மூலம் பேசினேன். அப்போது அவர் லாகூரில் இருந்தார். இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை'' என்றார். அஞ்சுவிற்கு 15 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 

அதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் என்ற திருமணம் முடிந்த பெண், பப்ஜி விளையாட்டு மூலம் இந்திய நபர் மீது காதல் கொண்டு  அவரை சந்திப்பதற்காக இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இந்திய குடியுரிமையை பெற முயற்சி செய்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Facebook love Indian woman travels to Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->