மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கச் சென்ற தந்தை.!! விபரீதத்தில் முடிந்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கச் சென்ற தந்தை.!! விபரீதத்தில் முடிந்த சம்பவம்.!!

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் கொட்டியூர் அருகே கேளகம் பகுதியைச் சேர்ந்தவர் லிஜோ ஜோஸ்-ஸ்டெபனா தம்பதியினர். இவர்களின் மகன் நெபின் ஜோசப், மகள் ஷிவானியா. மகன் நெபின் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுப்பதற்காக அருகில் உள்ள பாவலிப் புழா ஆற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார். 

அப்போது, எதிர்பாராத விதமாக நெபின் ஜோசப் சகதியில் சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்த லிஜோ ஜோஸ் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரும் சகதியில் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து இரண்டு பேரும் தங்களைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். இந்த சத்தத்தைக் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவல் படி போலீசார் விரைந்து வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father and son died for went to swimming training


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->