கணவனின் கள்ளக்காதலை கண்டித்த மனைவி.. குடும்பத்தையே தீ வைத்துக் கொன்ற நபர்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாத் வயது 40. இவருக்கு ப்ரீத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சமீரா மற்றும் சமிக்ஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில் பிரசாத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதனையறிந்த பிரசாத்தின் மனைவி ப்ரீத்தி மற்றும் மகள்கள் கண்டித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணுடன் இருக்கும் தொடர்பை நிறுத்தும்படி ப்ரீத்தி தனது கணவரை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், இதையெல்லாம் பிரசாத் பொருட்படுத்தவில்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த பிரசாத் தனது மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் ப்ரீத்தி மற்றும் அவருடைய இரண்டு மகள்களும் பலத்த காயமடைந்தனர். மேலும் பிரசாத்தின் மீதும் உடல் முழுவதும் தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர்.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகள்கள் சமீரா மற்றும் சமிக்ஷா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father fired 2daughters and wife in Maharashtra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->