மகள்களின் கழுத்தை அறுத்து தந்தை தற்கொலை - காரணம் அறியாமல் தவிக்கும் போலீசார்! - Seithipunal
Seithipunal


கேரளா, கோட்டயம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோமோன் (வயது 40) கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். 

இதனால் ஜோமோன் தனது மகள்கள் அனன்யா (வயது 13), அனாமிகா (வயது 10) அமேயா (வயது 7) ஆகிய மூன்று பேருடன் வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில் ஜோமோன் தனது 3 மகள்களை கழுத்தை அறுத்துவிட்டு அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தந்தை கழுத்து அறுக்கப்பட்ட சிறுமிகள் 3 பேரும் இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்து 3 சிறுமிகளை மீட்டு கோட்டையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

மேலும் ஜோமோன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, எதற்காக 3 குழந்தைகளை கழுத்து அறுத்து கொல்ல முயற்சித்து தானும் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிறுமிகள் 3 பேரும் உயிருக்கு போராடிய நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

3 மகள்களின் கழுத்தை அறுத்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father killed attempt daughters after suicide


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->