அதிர்ச்சி - மகளுக்கு வரன் தேடி 3 லட்சம் செலுத்திய பணக்கார தந்தை.!
father three lakhs spend money daughter marriage
பொதுவாக பணக்கார குடும்பத்தினர் தங்களது மகளுக்கு வசதிக்கேற்ப பெரிய இடத்தில் மாப்பிள்ளை தேடுவார்கள். இந்த நிலையில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு தங்களை விட மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் இருந்து மட்டுமே வரன் வேண்டும் என்பதற்காக ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்தியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக மிஷ்கா ராணா என்ற பயனர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ரூ.200 கோடிக்கு மேல் வசதி கொண்ட பணக்கார குடும்பத்தில் இருந்து மட்டுமே வரன் வேண்டும் என்பதற்காக எனது நண்பரின் தந்தை ஒருவர் ஆன்லைன் தளத்தில் ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்தி உள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
இவருடைய இந்தப் பதிவு வைரலாகி 2.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். திருமண வரன் பார்ப்பதற்காக மூன்று லட்சம் செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
father three lakhs spend money daughter marriage