சம்பள பாக்கி கேட்ட ஓட்டுநரை அடித்து அசிங்கப்படுத்திய பெண் ஊழியர்கள்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சம்பள பாக்கி கேட்ட ஓட்டுநர் ஒருவரை பெண் ஊழியர்கள் சேர்ந்து அடித்து அசிங்கப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த ராகுல் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் தினேஷ் என்பவர் கார் ட்ரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை அந்த நிறுவனம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிறுவனத்திற்கு சென்ற தினேஷ், பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் தனக்கான சம்பள பாக்கியை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பெண் ஊழியர்கள் தகாத வார்த்தைகள் கூறி ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அவர், நிறுவனத்தின் மேலாளர் செல்போன் எண்ணை தரும்படி பெண் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து வாக்குவாதம் முற்றியதில் பெண் ஊழியர்கள் ராகுலை சரமாரியாக தாக்கியுள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Female employees beat the driver asked for arrears of salary


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->