ஃபெஞ்சல் புயல்: தமிழகத்திற்கு உதவ கேரளா தயாராக உள்ளது – பினராயி விஜயன் - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதனால், சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்தது.

குறிப்பாக, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால் அதி கனமழை கொட்டியது. இதனால் இந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து, கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு, மலையடிவாரத்தில் இருந்த ஒரு வீட்டை மண் மூடியதில் 7 பேர் உயிரோடு புதைந்து பலியானார்கள்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், "ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மீண்டும் மீண்ட தமிழக மக்களுக்கான எங்களது எண்ணங்கள் உள்ளன.

இந்த சவாலான நேரத்தில், கேரளா அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. தேவையான எந்த உதவிகளையும் வழங்க கேரள அரசு தயாராக உள்ளது. ஒன்றாக இணைந்து வென்று வருவோம்" என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fenchal storm Kerala ready to help Tamil Nadu Pinarayi Vijayan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->