ம.பியில் பரபரப்பு.! கோவில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 55 பேருக்கு வாந்தி, மயக்கம்.!!
fifty five peoples addmitted hospital for ate ice cream in madhya pradesh
ம.பியில் பரபரப்பு.! கோவில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 55 பேருக்கு வாந்தி, மயக்கம்.!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்கோன் மாவட்டம் சத்தால் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தினேஷ் குஷ்வாகா என்பவர் கோவில் வளாகத்தில் ஐஸ் கிரீம் தயாரித்து விற்பனை செய்தார். இதனை ஏராளமானோர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் உள்பட மொத்தம் 55 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் சுமார் 15 பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.
மற்ற அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அங்கு அவர்கள் ஐஸ் கிரீம் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fifty five peoples addmitted hospital for ate ice cream in madhya pradesh