உத்தர பிரதேசம் : கடந்த 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் : கடந்த 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு - காரணம் என்ன?

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் திடீரென மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுதிணறல் உள்ளிட்டவை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் மருத்துவமனைக்கு படையெடுத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, கடந்த 15-ந்தேதி 23 பேரும், 16-ந்தேதி 20 பேரும், 17-ந்தேதி 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த லக்னோவில் இருந்து மூத்த மருத்துவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தெரிவித்ததாவது:- 

"அதிகவெயில் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு முதலில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அதிக வெயில் தாக்கத்திற்கான முதல் அறிகுறி இல்லை. தண்ணீர் தொடர்பான நோய் பாதிப்பாக இருக்கலாம்'' என்றுத் தெரிவித்துள்ளது. 

மேலும், பொதுமக்கள் உயிரிழப்புக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ''அரசின் கவனக்குறைவால் உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிக வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கனும்.

கடந்த ஆறு வருடங்களில் ஒரு மாவட்ட மருத்துவமனை கூட கட்டப்படவில்லை. உயிரிழந்தவர்கள் மிகவும் ஏழை விவசாயிகள். அவர்கள் சரியான நேரத்தில் உணவு, மருந்துகள், சிகிச்சை பெற முடியாததுதான் அதற்கு காரணம்'' என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifty four peoples died in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->