நாட்டில் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்.! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் நாடாளுமன்ற படஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் ஆரம்பமானது. இந்த நிலையில், நேற்று 2023-2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பாஜக அரசின் முழு பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல சுவாரசியங்கள் வெளியானது.

அதில், விமானத்துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, "உள்நாட்டில் சிறு சிறு  நகரங்களுக்கு விமான சேவை அளிப்பதற்காக 'உதான்' திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தின் படி, இதுவரை விமான சேவை இல்லாத சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில், 'உதான்' திட்ட விமானங்கள், 1 கோடியே 15 லட்சம் பயணிகளை பல நகரங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளன. 

இந்தநிலையில், நாட்டில் வான்வழி இணைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக ஐம்பது விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஹெலிகாப்டர் தளங்கள், நீர்வழி விமான நிலையங்கள் மற்றும் நவீன தரை இறங்கும் மைதானங்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifty new airports and airpads in union budget


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->