வெள்ளத்தில் மிதக்கும் அசாம் - 56 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக 29 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகமாகி உபரி நீர் வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இந்த நீரால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதோடு வாழ்வாதாரத்தையும் அவர்கள் இழந்துள்ளனர். 

அதிலும் குறிப்பாக மழையால் பாதிக்கப்பட்ட கவுகாத்தி, மலிகான்படுதாக் உள்ளிட்ட பகுதிகளை மாநிலத்தின் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேத மதிப்புகள் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் கணக்கிடப்படும் என்றும், அதன்பின்னர் மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

அசாம் மாநிலத்தில் இதுவரைக்கும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 56 பேர் பலியாகி உள்ளனர். உலக பாரம்பரிய சின்னமான காசிரங்கா உயிரியல் பூங்காவுக்குள் வெள்ளம் புகுந்ததால், 17 விலங்குகள் இதுவரை இறந்துள்ளன. மேலும், மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 72 விலங்குகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifty six peoples died in assam for floods


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->