போதைப்பொருள் கடத்தல் - போலீஸ், ராணுவம் மோதல் - காஷ்மீரில் பதற்றம்!! - Seithipunal
Seithipunal



காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து சுமார் 110 கி. மீ. தொலைவில் உள்ள ஆசாத் காஷ்மீரை ஒட்டியிருக்கும் பகுதி குப்வாரா. இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனங்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக போலீசாருக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

கடந்த மே 28ம் தேதி குப்வாராவில் உள்ள காவல் நிலையத்திற்குள் புகுந்த ராணுவத்தினர், அங்கிருந்த போலீசாரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. 

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், மூன்று லெப்டினென்ட் கர்னல்கள் உட்பட 16 சீருடை அணிந்த ராணுவ வீரர்கள் அனுமதியின்றி காவல் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த போலீசாரை தாக்கியுள்ளதாகவும், மேலும்  தகவல் அறிந்தவுடன் காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலுக்குள்ளான காவல்துறையினரை மீட்டுள்ளனர். காவல்துறை உயரதிகாரிகள் வருவதைக் கண்ட ராணுவ வீரர்கள் காவல் நிலையத்தில் இருந்த போலீசாரின் கைப்பேசிகளை பறித்துள்ளனர்" என்று அந்த FIR ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த FIR குறித்து ராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் ராணுவத்திற்கு ஆதரவு வழங்கும் பகுதி நேரத் தன்னார்வ அமைப்பினரைக் கொண்ட ஒரு ரிசெர்வ் படை என்று ஸ்ரீநகர் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

முன்னதாக காஷ்மீரில் போதைப்பொருட்கள் தற்போது அதிகரித்திருப்பது குறித்த புகாரில் போலீசார் ஒரு இடத்தில் சோதனை மேற்கொண்டதற்கு பிறகு தான் இந்த தாக்குதல் நடந்திருப்பது கவனிக்கத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fight Between Police And Army in Kashmir


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->