மைசூரில் பட்டாசு குடோனில் தீ விபத்து - புகை மூட்டத்தால் மக்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


மைசூரில் பட்டாசு குடோனில் தீ விபத்து - புகை மூட்டத்தால் மக்கள் அவதி.!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரில் ஹூப்ளி தொழிற்பேட்டையில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் பல கோடி ரூபாய்கான பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், குடோனை சுற்றி சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. அதுமட்டுமல்லாமல், இந்த குடோனில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் முழுவதுமாக வெடித்து சிதறியதால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. 

இந்த புகை மூட்டத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையே இந்தத் தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இந்தக் குடோனில் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேவையான பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in mysoor firecracks factory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->