வெடித்து சிதறிய பட்டாசு ஆலை: பற்றி எரிந்த வீடுகள்... 11 பேர் பரிதாப பலி!
firecracker factory exploded 11 people killed
மத்திய பிரதேசம், ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த தீ விபத்தால் அருகில் இருந்த 60 வீடுகளுக்கும் தீ பரவியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
firecracker factory exploded 11 people killed