டெல்லி சட்டசபையின் முதல் நாள் கூட்டம்: கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு..!
First day of Delhi Assembly session Conflict between parties
டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்தது.
ஆனால், ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மிக்கும் இடையே முதல் நாளே மோதல் நிலை உருவாகியுள்ளது. இரு கட்சி உறுப்பினர்களும் அவையில் அமளி துமளியில் ஈடுபட்டனர்.
அதாவது, ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான அதிஷி அவர்கள், அங்கு பேசும் போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன என குற்றம்சாட்டினார். தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அவையில் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர்.

இதற்கு பதிலடியாக பா.ஜ.க. உறுப்பினர்களும் அவையில் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து, கோஷம் எழுப்பிய ஆம் ஆத்மி கட்சியை சபாநாயகர் கடிந்து கொண்டதோடு, பொறுப்பற்ற முறையில் எதிர்க்கட்சியினர் நடந்து கொள்கிறார்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், உங்களுடைய இடங்களுக்கு சென்று அமருங்கள். அவையை நடத்த விடுங்கள் என கேட்டு கொண்டார். அவைக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்திலேயே எதிர்க்கட்சியினர் வந்துள்ளனர் என கூறியதுடன், அவையின் கண்ணியத்திற்கு ஊறு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
இதனை ஓர் அரசியல் தளம் போல் ஆக்கக்கூடாது என கடுமையாக கூறியதுடன், அவையை சுமுக முறையில் நடத்த எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து, அவை 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்போதும், அவைக்கு வெளியே பேசிய அதிஷி, அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன என குற்றம் சுமத்தினார். அத்துடன், பா.ஜ.க.வின் மகிளா சம்மான் யோஜனா திட்டத்துடன் தொடர்புடைய நிறைவேற்றப்படாத வாக்குறுதியை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டாக கூறினார்.
ஆனால், எந்த புகைப்படமும் நீக்கப்படவில்லை என பா.ஜ.க. எம்.எல்.ஏ. தர்வீந்தர் சிங் மார்வா கூறியுள்ளார். மேலும், கெஜ்ரிவால் ஒருவரே பொய் கூறுகிறார் என நாங்கள் நினைத்தோம். ஆனால், அதிஷி அவரை மிஞ்சி விட்டார் என்று பதிலுக்கு குற்றச்சாட்டாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
First day of Delhi Assembly session Conflict between parties