6 அடி பேருந்தில் 7 அடி உயர வாலிபருக்கு நடத்துனர் வேலை - கழுத்து வலியால் அவதி.!!
7 feet youth work in 6 feet bus in telungana
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்த இவருடைய தந்தை கடந்த 2021-ம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்ததனால், கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு நடத்துனர் வேலை வழங்கப்பட்டது.
7 அடி உயரம் கொண்ட அமீன் அகமது அன்சாரிக்கு 6 அடி உயரம் கொண்ட பேருந்தில் நடத்துனர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலை குனிந்த படி வேலை செய்து வருகிறார்.
இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்காக அன்சாரி அடிக்கடி மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். கழுத்து வலியால் அவதிப்படுவதாக நடத்துனர் பயணிகளிடம் புலம்பி வருகிறார்.
இதுகுறித்து பேருந்து பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அவருக்கு போக்குவரத்து பணிமனையில் வேறு வேலை வழங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
English Summary
7 feet youth work in 6 feet bus in telungana