2026 தேர்தல்: இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!!
NTK Seeman Karthi Election 2026
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை சூழல் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், நாம் தமிழர் கட்சி சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள்.
இதற்கமைய, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
சமூக நீதிக்கும், தமிழர் உரிமைக்கும் உறுதுணையாக உள்ள இடும்பாவனம் கார்த்திக், கடந்த சில ஆண்டுகளாக கட்சியில் தீவிர அரசியல் செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறார்.
இளைஞர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ள கார்த்திக், தற்போது நேரடியாக சட்டமன்றப் போட்டிக்குத் தயாராகிறார்.
English Summary
NTK Seeman Karthi Election 2026