உ.பியில் சோகம் - மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் பலி - 5 பேர் காயம்.!
five devotees died and five devotees injured for electric shock attack in UP
உ.பியில் சோகம் - மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் பலி - 5 பேர் காயம்.!
கன்வார் யாத்ரா இந்தியாவின் மிகப்பெரிய ஒரு மதக் கூட்டமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த யாத்திரையில் 10 முதல் 12 மில்லியன் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்த முக்கிய நிகழ்வில் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த பாதயாத்திரையில் கலந்துகொள்வதற்காக ஒரு வேனில் பத்து பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் ,மாவட்டம் சிஸோனா கிராமத்தில் நுழைந்தபோது வாகனத்தின் மீது மின்சார வயர் உரசி வண்டியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் முதலில் மின்சாரத்தை துண்டித்து பிறகு படுகாயமடைந்தவர்களி மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அணுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்னர் போலீசார் உயிரிழந்தவரின் உடலையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five devotees died and five devotees injured for electric shock attack in UP