பொதுமக்களுக்கு குட் நியூஸ் - குடும்ப அட்டைக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவம்.! - Seithipunal
Seithipunal


பொதுமக்களுக்கு குட் நியூஸ் - குடும்ப அட்டைக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவம்.!

மத்திய அரசு சார்பில் ஆயுஷ்மான் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், இதுவரைக்கும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மக்கள் இலவச ரேஷன் பொருட்களை மட்டுமே வாங்கி வந்தனர். ஆனால், தற்போது ஆயுஷ்மான் பரிசு திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பரிசுத் திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், அக்டோபர் இரண்டாம் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் இதுவரைக்கும் 80 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் மக்கள் அனைத்து சுகாதார வசதிகளும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five lakhs free treatment to family card central government announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->