கள்ள நோட்டு அச்சடித்த 5 பேர் கைது.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!
five peoples arrested for fake notes printing in delhi
கள்ள நோட்டு அச்சடித்த 5 பேர் கைது.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!
டெல்லியில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஃபார்ஸி' இந்தி வெப் சீரிஸ் பார்த்து கள்ள நோட்டுக்களை அச்சடித்த 5 பேரை போலீஸார் இன்று கைது செய்து, அவர்களிடமிருந்து 19.74 லட்சம் போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தெரிவித்ததாவது, "மாநிலங்களுக்கு இடையேயான கள்ளநோட்டுக்களை மாற்றும் கும்பலிடம் இருந்து 500 ரூபாய் போலி நோட்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'ஃபார்ஸி' வெப் சீரிஸ் பார்த்து கள்ள நோட்டுக்களை அச்சடித்ததாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஹிமான்ஷு ஜெயின், ஷிவ் லால் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அஜ்மீரில் ஒரு பிரிண்டிங் யூனிட்டை அமைத்து கள்ள நோட்டுக்களை அச்சடித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து போலி ரூபாய் நோட்டுக்கள், மடிக்கணினிகள், பிரிண்டர்கள், லேமினேஷன் இயந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள், வெட்டப்பட்ட தாள்களில் இருந்த ரூ.8 லட்சம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளோம். மேலும், சிம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்" என்றுத் தெரிவித்துள்ளனர்.
English Summary
five peoples arrested for fake notes printing in delhi