சத்தீஸ்கரில் பரபரப்பு : நாடகம் பார்க்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல் - சிறுவன் உள்பட 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டம் மாவ்லிபதர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்தத் திருவிழாவின் போது, நாடக போட்டி, சேவல் சண்டை, ஓவியப்போட்டி என்று அனைத்தும் நடைபெறும். இதனைக் காண்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். 

இந்த நிலையில், இந்தக் கோவிலில் கடந்த சனி கிழமை நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதைபார்ப்பதற்காக பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்துள்ளனர். அங்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர், இளம்பெண் ஒருவர் ஆட்கள் இல்லாத பகுதியில் தனியாக இருந்துள்ளார். 

இதை கவனித்த ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணை ஆளில்லாத பகுதிக்கு கடத்தி சென்று, கும்பலாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளது. இதையடுத்து, அந்த பெண் வீட்டுக்கு சென்று நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னர், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நிவேதிதா பால் தெரிவித்ததாவது, 

"திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்த பெண் ஒருவரை ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த வழக்கில் சிறுவன் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய நபர்களையும் தேடி வருகிறோம். இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for sexuall harassment case in chattisgarh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->