கோர விபத்து - லாரி மீது கார் மோதி 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் உள்ள மன்மட்-யோலா சாலையில் கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 

இதைப்பார்த்த அப்பகுதியில் சென்ற சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள் அனைவரும் நாசிக் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது:- 

"விபத்து நடந்த இடத்தில் மழை மற்றும் இருள் காரணமாக மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died for accident in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->