பீகாரில் பயங்கரம் - ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 5 பேர் பலி.!
five peoples died for bihar train accident
பீகாரில் பயங்கரம் - ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 5 பேர் பலி.!
தலைநகரான டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா நோக்கிச் அதிவிரைவு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் படி இந்த ரெயில், பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஆறு பெட்டிகள் தடம் புரண்டன.
இதில் ஏராளமான பயணிகள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில், இந்த விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலம் தகவல் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது இந்த விபத்தில், 5 பேர் பலியாகியுள்ளதாகவும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிய ரெயில்வே துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதாவது,
97714 49971
89056 97493
77590 70004
83061 82542
உள்ளிட்ட எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
English Summary
five peoples died for bihar train accident